தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த அருணேஸ்வரன், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தனது படிப்பை முடித்தார். கடந்த 24.01.2026 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், யாரும் எதிர்பாராத விதமாக 23 தங்கப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
View this post on Instagram
அருணேஸ்வரனின் தந்தை இளங்கோ, ஒரு சர்க்கரை ஆலையில் சாதாரண எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். எளிய பின்னணியில் இருந்து வந்து இவ்வளவு பெரிய சாதனை படைத்த மாணவரைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அமைச்சர் ரா.இராஜேந்திரன் நேரில் அழைத்து வாழ்த்தினார்.
மேலும், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கி கௌரவித்தார். இந்தச் சாதனை மாணவனின் குடும்பத்தினர் மற்றும் தர்மபுரி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
