பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி, சமீபத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். ஆனால், திடீரென அக்கட்சியில் இருந்து விலகி, ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அவருக்குப் புதிய கட்சியில் இணைந்த உடனேயே மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தாடி பாலாஜிக்கு “பரப்புரை பொதுச்செயலாளர்” என்ற முக்கிய பதவியை வழங்கியுள்ளார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சிக்குப் பலம் சேர்க்கும் வகையில் தாடி பாலாஜி தமிழ்நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.