விஜய்யின் அரசியல் என்ட்ரியை அதிமுக தரப்பு ‘நிலப்பிரபுத்துவத்தின் மறுவடிவம்’ என விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிமுக தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போது மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது.
விஜய்யை “பனையூர் நிலப்பிரபு” என்று விமர்சித்துள்ள அதிமுக, அவர் ஒரு “மாபெரும் ஊழல் பெருச்சாளி” என்றும் சாடியுள்ளது. மேலும், விஜய்யின் கொள்கைகள் மற்றும் மாநாட்டுப் பேச்சுகள் எதார்த்தத்திற்குப் புறம்பாக இருப்பதாகவும், திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை வைத்து அரசியலில் நிலப்பிரபுத்துவத்தைச் செய்ய முயல்வதாகவும் அதிமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
“வாரிசு அரசியலை விட, இப்படிப்பட்ட நிலப்பிரபுத்துவ அரசியல் தமிழ்நாட்டிற்குப் பெரும் ஆபத்தானது” என்று அதிமுக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. விஜய்யின் அரசியல் பயணம் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்குமோ என்ற அச்சத்தின் காரணமாகவே இத்தகைய கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
