தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருகின்றார் ஜெயம் ரவி. இவர் தற்போது கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் என இரண்டு நடிகைகள் நடிக்கின்றார்கள். சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இரட்டை வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கும் இத்திரைப்படத்தை ஸ்கீரின் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரிக்கின்றது. சாம் சிஎஸ் இசையமைத்திருக்கின்றார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முதல் பாடலான துரோகம் என்ற பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலானது தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.