செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கர்நாடகா எவ்வளவு தண்ணி கொடுக்குறாங்க ? நீங்களே பாக்குறீங்க பத்திரிகைக்காரர்கள்…. உங்களுக்கு தெரியும்…  ஒரு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி  தண்ணீர் என்று சொன்னார்கள். இப்ப அது குறைஞ்சு,  வினாடிக்கு 3 ஆயிரம்  கனஅடி  தண்ணீர், நேற்றிலிருந்து விடப்படும் என சொல்றாங்க.  வினாடிக்கு இத்தனை ஆயிரம் கனஅடி தண்ணீர் விடுவது கடைமடை வரைக்கும் போய் சேருமா ? என்பது முதல் கேள்வி.

அப்போ நம்ம வருடம் தோறும் கர்நாடகாவை கையேந்தி…. அவர்களை எதிர்பார்த்து இருக்கின்ற நிலைமை ஏன் வருகிறது ? அப்ப தமிழ்நாட்டில் பெய்கின்ற மழை எல்லாம் எங்கே போய் சேர்கிறது?  இங்கே தூர்வாருவது கிடையாது, மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை, நிலத்தடி நீர் இன்னைக்கு இல்லாம போனதன் விளைவு….  தண்ணீரை சரியாக தொலைதூரப் பார்வையோடு பார்க்காமல்… இங்கு தடுப்பணைகளை அமைத்து நீரை சேமித்து…  விவசாயத்திற்கு நாம் யாரையும் கையேந்தாமல்….  தமிழ்நாடு  தன்னிறைவு பெற வேண்டும் என்றுதான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் என்ன பண்ணிட்டு இருக்காங்க ? எப்ப பார்த்தாலும் நாம் கர்நாடகா கிட்டயே கேட்டுட்டு இருந்தா ? தமிழ்நாடு எதுக்கு ? ஃபர்ஸ்ட் காவிரி எங்க ஆரம்பிக்குது ?  குடகுல ஆரம்பிக்குது. தலை காவேரி என்றுஅதுக்கு பெயரு. அது ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் தமிழ்நாட்டோடு இணைந்த பகுதி.  பொன்னியின் செல்வன் என்று ஏன் சொல்கின்றோம் ? அந்த காவிரியில் இருந்து உயிர் பிழைத்து ராஜராஜ சோழன் தப்பி வந்ததுனால, அந்த குடகு மலைக்கு பொன்னி என்று பெயர். காவிரியில் அவர் உயிர் பிழைத்ததனால தான் அவருக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர்.

அப்போ தமிழ்நாட்டுக்கு சேர்ந்த பகுதி. இது பிரிந்து அரசியல் சூழ்ச்சியினால் கர்நாடகாவுக்கு போயிடுச்சு. இப்படியே நாம உரிமைகள்  ஒவ்வொன்றும் விட்டுக் கொடுத்துட்டு இருந்தா என்ன இருக்கு ? அங்க பாத்தா கச்சத்தீவை விட்டுக் கொடுத்தாச்சு. இந்த பக்கம் பார்த்தா குடகுவை விட்டு கொடுத்தாச்சு. அப்போ தமிழ்நாட்டுக்கு என்று இருக்கின்ற அத்தனையும் நாம் விட்டுக் கொடுத்துவிட்டு,  சுயநல அரசியல் செய்யும் அரசியல்வாதிகளால் தான் இன்னைக்கு தமிழ்நாடு பாலைவனமாக மாறி இருக்கே ஒழிய,  இதுல வேற எந்த மாற்று கருத்தும் இல்லை என தெரிவித்தார்.