பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராகப் புதிய சதித் திட்டங்களை (New Plot) வகுத்து வருவதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணு ஆயுத மிரட்டல்களை விடுத்து வரும் முனீர், இந்தியாவின் வரைபடத்தையே மாற்றுவோம் எனப் பேசி வருவதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். “பாகிஸ்தான் உலக வரைபடத்தில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால், பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்” என்று அவர் நேரடியாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தனது வேலையை நிறுத்தவில்லை என்றால், ‘ஆபரேஷன் சிந்தூர் – பகுதி 2’ வெகு தொலைவில் இல்லை என்றும், இந்த முறை இந்திய ராணுவம் எந்தக் கட்டுப்பாடும் இன்றி செயல்படும் என்றும் தளபதி எச்சரித்துள்ளார்.

 ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகும் பாகிஸ்தானில் இன்னும் 8 பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது.