ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மற்றும் மேக் கணினி பயனர்களுக்கு கூகுள் குரோம் உலாவியைப் பயன்படுத்துவது குறித்து முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பழைய குரோம் பதிப்புகளைப் பயன்படுத்துவது பயனர்களின் தரவுகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும், சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கலாம் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

மேலும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் ஆப்பிள் நிறுவனம் எப்போதும் கடுமையான விதிகளைப் பின்பற்றி வருவதால், குரோமுக்கு மாற்றாக அதன் சொந்த ‘சபாரி’ உலாவியைப் பயன்படுத்துவது அதிக பாதுகாப்பானது என்று அந்நிறுவனம் பரிந்துரைக்கிறது. கூகுள் நிறுவனமும் கூட பாதுகாப்பு அப்டேட்கள் இல்லாத பழைய பிரவுசர்களைப் பயன்படுத்துவது ஆபத்தானது என எச்சரித்துள்ள நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் பயனர்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில் ஆன்லைன் பாதுகாப்பை உறுதிப்படுத்த பயனர்கள் தங்களது பிரவுசர்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும் அல்லது ஆப்பிளின் சபாரி போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்ட செயலிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த எச்சரிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் தேவையற்ற தரவு திருட்டுகளைத் தவிர்க்க முடியும் என ஆப்பிள் நம்புகிறது.