
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், பாரதிய ஜனதாவோட கூட்டணியில் இருந்த போதும் எங்களுடைய நாடாளுமன்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாள்…. 1 நாள் இல்லை 2 நாள் இல்லை 22 நாள் நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கிய அரசு , இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
இன்னைக்கு 39 எம்பி வைத்திருக்கிறீர்கள்? ஒரு நாள் இந்த நாடாளுமன்றத்தை உங்களால் முடக்க முடிந்து இருக்கிறதா? தைரியம் இருக்கிறதா ? ஆண்மை இருக்கிறதா ? பண்ணி பாரு… அடுத்து உன் வீட்டுக்கு வருவாங்க அமலாக்கத்துறை.
இதுக்கெல்லாம் நாங்க பயந்தவங்க கிடையாது. பண்ணி பாரு ? வந்துருச்சு… கிட்ட வந்துருச்சு…. இன்னும் கொஞ்சம் தான்.. டிசம்பர் தாண்டியதும் போய்விடுவார்கள்…. பயந்து தொடை நடுங்கி போயிருவாங்க. எந்த இரவுக்கு போலீஸ் வரும்போமோ, சிபிஐ வருமோ அப்படின்னு எங்கள பாத்து சொல்லுறாங்க.. நாங்க எல்லாத்துக்கும் தயாராக இருக்கிறோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுக்கு மடியில் கனம் இல்லை. வழியில் எங்களுக்கு பயம் இல்லை. உன்னை மாதிரி 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டை சுரண்டி, கொள்ளை, அடித்து வைக்கவில்லை நாங்கள்… இன்னைக்கு என்ன நடக்குது ? என தெரிவித்தார்.