திருவிழா ஒன்றின் கூட்ட நெரிசலுக்கு நடுவே, ஒரு தந்தை பொம்மைத் துப்பாக்கிகளை விற்றுக்கொண்டிருக்கிறார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவரை உட்காரக்கூட விடாமல் நிற்க வைத்துள்ளது.
ஆனால், அங்கேயே நின்றுகொண்டிருக்கும் அவரது சிறு வயது மகன், நாள் முழுவதும் நடந்த களைப்பால் தூக்கம் சொக்க, படுக்க இடமில்லாமல் தனது தந்தையின் கால்களையே கட்டிக்கொண்டு அப்படியே உறங்கிவிட்டான்.
View this post on Instagram
தரையில் அமரக்கூட இடமில்லாத அந்தச் சூழலில், தந்தையின் கால்களே அந்தச் சிறுவனுக்கு மெத்தையாக மாறியுள்ளது. ஒரு பக்கம் வியாபாரத்தில் கவனம் செலுத்தினாலும், அவ்வப்போது தனது மகனின் தலையைத் தந்தை வருடிக்கொடுக்கும் காட்சி பார்ப்பவர் எவரையும் கண்கலங்க வைக்கும் விதமாக உள்ளது.
வறுமை ஒரு மனிதனை எவ்வளவு தூரம் போராட வைக்கும் என்பதற்கும், எந்தச் சூழ்நிலையிலும் தந்தையின் அரவணைப்பே ஒரு குழந்தைக்குப் பாதுகாப்பான இடம் என்பதற்கும் இந்த வீடியோ ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, “இந்தத் தந்தைக்கும் மகனுக்கும் யாராவது உதவி செய்யுங்களேன்” எனப் பலரையும் உருக வைத்துள்ளது.
