மருத்துவமனை படுக்கையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள தனது பிஞ்சு மகளை மகிழ்விக்க தந்தை ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், கையில் ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் படுக்கையில் இருக்கும் சிறுமியின் அருகில் அமர்ந்துள்ள தந்தை, ஒரு ‘பப்பில் டாய்’ (Bubble Toy) மூலம் சோப்பு குமிழிகளை பறக்கவிட்டு விளையாடுகிறார். வலியால் வாடும் அந்தச் சிறுமி, தன் தந்தை ஊதும் குமிழிகளைப் பார்த்து புன்னகைக்கும் காட்சி பார்ப்போரின் கண்களைக் குளமாக்குகிறது.

இது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்ட இந்த 21 விநாடி வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர். “மருத்துவ சிகிச்சையை விட பெற்றோரின் அன்பும் அருகாமையும் தான் ஒரு குழந்தைக்கு பெரும் பலம்” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘மருத்துவமனையில் மருந்துகளை விட ஒரு தந்தையின் புன்னகையும் அரவணைப்புமே அந்த குழந்தைக்கு பெரிய ஆறுதலாக இருக்கிறது’ என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.