இரவு நேரங்களில் வேலை செய்யும் டெலிவரி பாய்கள் மற்றும் கேப் டிரைவர்களுக்குப் பாதுகாப்பு என்பது எப்போதும் ஒரு கேள்விக்குறிதான்.
இந்நிலையில், நள்ளிரவில் வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டு வாசலில் ஆர்டரை டெலிவரி செய்ய நின்றிருந்தார் ஒரு டெலிவரி பாய். அப்போது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை வழிப்பறி செய்யத் திட்டமிட்டு நெருங்கினர்.
ஆபத்தை உணர்ந்த அந்த இளைஞர், பதற்றமடையாமல் தனது டெலிவரி பேக்கிற்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பெரிய கத்தியை மின்னல் வேகத்தில் வெளியே எடுத்தார்.
Un repartidor se dio cuenta de que se acercaban ladrones y sacó un machete de su mochila con el que los puso a correr 😮 pic.twitter.com/qMNEFgymaR
— Cultura Literal (@culturaliteral1) January 6, 2026
கையில் கத்தியுடன் அந்த வாலிபர் ஆக்ரோஷமாகப் பாய்வதைக் கண்ட கொள்ளையர்கள், “வந்த வேகத்தில்” அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
விடாமல் விரட்டிய அந்த இளைஞர், கொள்ளையர்களை அந்தப் பகுதியை விட்டே துரத்தினார். இந்தச் சம்பவம் உராகுவே (Uruguay) நாட்டின் மாண்டேவீடியோவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
2024-ல் நடந்த பழைய வீடியோ என்றாலும், தற்போது இணையத்தில் வைரலாகி 25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
“தற்காப்புக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என்பதற்கு இந்த இளைஞர் ஒரு சிறந்த உதாரணம் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
