
SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநாடு மதுரையில் நடைபெற்றது. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்ற பொழுது கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் வாகனத்தை நிறுத்தி விட்டார்கள்.
அந்த அரங்கத்திற்கே வர முடியவில்லை. இரவு இரண்டு மணி, 3 மணிக்கு வந்து அந்த மைதானத்தை பார்த்துவிட்டு சென்றார்கள். திரு. ஸ்டாலின் அவர்களை பொறுத்தவரை…. கிராமத்தில் சொல்லுவார்கள்…. சீப்பை ஒழித்து விட்டால், கல்யாண நின்று விடும் என்று…..
இங்கே SDPI தொண்டர்களை வேறு பகுதிக்கு அனுப்பினாலும் அவர்களின் உள்ளம் எப்பொழுதும் உறுதியாக இருக்கிறது, ஒன்னும் செய்ய முடியாது ஸ்டாலின் அவர்களே…. அதோடு நேரம் வேறு குறைவாக போய்விட்டது. நிறையா பேசலாம் என்று வந்தேன். ஆனால் வருகிற பொழுது பல்வேறு வரவேற்பு இருந்த காரணத்தினால் உரிய நேரத்திற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் கிடைக்கின்ற நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி, உங்களுக்கு சில தகவலை தெரிவிக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார்.