
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, உலகத்தில் எங்கையாவது பார்த்திருக்கமா… படுத்துக் கொண்டு ஜெயித்தார் MGR …. பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்தவர் மக்கள் நம்முடைய தமிழ்நாட்டு மக்கள். ஆனால் புரட்சித்தலைவர் எங்க நின்னாலும் ஜெயிச்சாரு. தென் மாவட்டங்களை நம்பினார்.. நாங்க பாசக்காரங்க…. உயிரே கொடுப்போம் கொள்கைக்காக….
எங்களை வேரறுக்க நினைத்தால், வெட்டியும் சாய்ப்போம். இதாண்டா தென்மாவட்டம். எங்களை நம்பினார்… அவர் நின்றதெல்லாம் பார்த்தீங்கன்னா மேற்கு தொகுதி. முதன் முதலில் அருப்புக்கோட்டை 1980இல் இங்க நிக்குறாரு. அப்பறோம் பரங்கிமலை… அப்புறம் ஆண்டிப்பட்டி. அவர் தென் மாவட்டங்களை நம்பினார். அப்படி வளர்ந்த இயக்கம் தான்… 16 லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள் தலைவர் காலத்தில்… அதை ஒன்றரை கோடி தொண்டர்களாக மாற்றினார் புரட்சி தலைவி…
புரட்சித்தலைவர் மறைந்தார். உடனே கவிதை எழுதினார்… என் ஆருயிர் என… அப்படி அழுதார்…. ரத்தக்கண்ணீர் வடிக்கிற மாதிரி பேசினாரு கலைஞர். முடிந்தது எம்ஜிஆர் சகாப்தம், அண்ணா திமுக அவ்வளவுதான் அப்படின்னாங்க… புரட்சித்தலைவி வீரு கொண்டு எழுந்தார். நடந்த தேர்தல்ல ஜா அணி, ஜெ அணி என பிரிஞ்சதால … மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்று தெரியாமல் ? அவர் முடியாம அவர்கள் ஆளும் கட்சியாக உருவாகினார்கள். 1987இல் நடந்த தேர்தல்ல இதுதான் நடந்தது என தெரிவித்தார்.