தீபாவளி திருநாளை முன்னிட்டு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக  எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் வழங்கினார். தீபாவளியையொட்டி, இன்று சென்னை மாம்பலம் வட்டாட்சியர் அலுவலகத்தில்,‌ விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் வழங்கினார்.

இதில் விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர ராஜா, பெருநகர சென்னை மாநகராட்சிக் கணக்கு குழுத் தலைவர் தனசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.