
என் மண், என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மோடி வீட்டுக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் மானியம் வருகிறதா ? அது உரிமை. மோடி ஐயா கேஸ் சிலிண்டர் மானியம் 300 ரூபாய் வருகிறதா ? அது உரிமை…. திமுககாரனை பொறுத்த வரைக்கும் அது ஓசி …. பொன்முடியை பொறுத்த வரைக்கும் ஓசி.
தாய்மார்களின் சாபம்தான் பொன்முடியை ஜெயிலில் கொண்டு வைத்திருக்கிறது. அண்ணா உண்மையிலே முதல் வரிசையில் இருக்கின்ற அனைவரையும் கூப்பிட்டு மைக்கில் பேச வைக்க வேண்டும். என்னை விட அருமையாக பேசுகிறார்கள்.
அண்ணா இந்த பாயிண்ட் பேசுங்க…. அண்ணா இந்த பாயிண்ட் பேசுங்க…. சகோதர – சகோதரிகளே…. நான் உங்களிடம் கை கூப்பி வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் ? பெரியோர்களே…. தாய்மார்களே… ஒரு வரலாற்றுப் பிழையை நாம் செய்து விடக்கூடாது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் என்பது இந்தியாவின் வளர்ச்சிக்கான தேர்தல்.
இந்தியா வல்லரசு நாடாக மாறுவதற்கான தேர்தல். அந்த வரலாற்றுப் பிழைகளை செய்யாமல், 2024 ஆம் ஆண்டு “மோடியோடு நாம், நம்மோடு மோடி” என்று மோடி அவர்களுக்கு நம்முடைய வாக்குகளை அளித்து, தமிழகத்தில் 39 பாராளுமன்ற உறுப்பினர்களை கூட பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும் என்று அன்பான வேண்டுகோள் என பேசினார்.