என் மண், என் மக்கள்  யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,   என் மண், என் மக்கள்  யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,   ஆத்தூரில் இருக்கின்றோம். படையாட்சியூர்,  கல்லிடைப்பட்டி, குமாரபாளையம், இடையார்பட்டி என பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள்,  வாழப்பாடி ஆத்தூருக்கு தினமும் வாரங்க….  எப்படிங்க ஐயா வாரங்க ?  மீன் போல ஆத்துல நீந்தி நீந்தி வாரங்க. 

இத்தனை ஆண்டு காலமாக  இந்த கிராமத்தை இணைப்பதற்கு பாலம்  கூட இல்லாமல், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் இவர்கள் வளர்ச்சி என்று சொல்கிறார்கள்.  கிட்டத்தட்ட 10 கிராம மக்கள் இன்னைக்கும் தண்ணீரில் நடந்து வெளியே வருகிறார்கள். இரவு நேரத்தில் கடக்கிறார்கள், மழைக்காலத்தில் கிடைக்கிறார்கள்.  இதை இவர்களால் செயல்படுத்த முடியவில்லை, ஒரு பாலத்தை இவர்களால் கட்ட முடியவில்லை.

ஒரு ஆற்று பாலத்தை கட்ட முடியாத திராவிட மாடல் அரசு, தமிழகம் முன்னேறிவிட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அதற்க்கு இந்த 10 கிராம மக்களும் சாட்சியாக சொல்கின்றோம்.  என்னையா முன்னேறி  இருக்காங்க. நாங்க ஆத்துல தண்ணீர் இருந்தாலும்,  அந்த கஷ்டத்திலும் நடந்து போகிறோம். இளைஞர்கள், பெரியோர்கள் இருந்தாலும், வேட்டியை கட்டிகிட்டு  நடந்து போகிறோம். ஒரு பாலம் இல்லாமல் ஆத்தூர் தொகுதியில் 10 கிராம மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.