சென்னை குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 8 மணி முதல், நாளை மாலை 4 மணி வரை 5 மண்டலங்களுக்கு தண்ணீர் வினயோகம் தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது தண்டையார்பேட்டை பகுதிகள், புரசைவாக்கம் பகுதி, பெரிய மேடு, எழும்பூர், சவுகார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, அயனாவரம், செம்பியம், ஓட்டேரி, பெரம்பூர், வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகள் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம். இதனை https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு 0445674567 என்று எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.