தமிழ் சின்னத்திரையில் பிரபலமான விஜேவாக இருப்பவர் அர்ச்சனா. கடந்த 23 வருடங்களாக வெற்றிகரமான தொகுப்பாளினியாக அர்ச்சனா வலம் வருகிறார். அதன் பிறகு சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியின் மூலம் அர்ச்சனா தன்னுடைய மகள் சாராவையும் தொகுப்பாளினியாக அறிமுகம் செய்து வைத்தார். சாரா சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சாரா நடிகர் விஜயின் சிலையை பார்த்து கதறி அழும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது நடிகர் விஜய்யை சாராவுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது தெரிகிறது. மேலும் அண்மையில் ஒரு பேட்டியில் நானும் என் கணவரும் விவாகரத்து செய்து பிரிய முடிவு எடுத்த போது என்னுடைய மகள் சாரா தான் எங்களை சேர்த்து வைத்தார் என அர்ச்சனா உருக்கமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.