தளபதி விஜய்யின் 67-வது திரைப்படமாக லியோ உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பல நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கின்றனர். லியோ படத்தின் அடுத்தகட்ட சூட்டிங்காக படக்குழு காஷ்மீரில் முகாமிட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டு தேதியின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் அக்,.19 ஆம் தேதியன்று ரிலீசாக இருப்பதாக அறிவித்துவிட்டனர். கைதி, விக்ரம் ஆகிய படங்களில் தமிழக அளவிலான போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து படமாக்கி இருந்த லோகேஷ் கனகராஜ், இப்படத்தை சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தலை மையமாக கொண்டு எடுப்பதாக கூறப்படுகிறது. அண்மை காலமாக போதை சாக்லேட்டுகள் பற்றிய தகவல்கள் வெளியே வருவதால் அது சம்பந்தப்பட்ட ஒரு கதையை மையமாக கொண்டு லியோ படத்தை அவர் இயக்கி வருவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.