தளபதி விஜய்யின் 67-வது திரைப்படமாக லியோ உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பல நட்சத்திர பட்டாளமே நடிக்க இருக்கின்றனர். லியோ படத்தின் அடுத்தகட்ட சூட்டிங்காக படக்குழு காஷ்மீரில் முகாமிட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டு தேதியின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் லியோ படத்தின் புரோமோ, டைட்டிலுக்கு கிடைத்த வரவேற்பை விட, அதில் இடம்பெற்ற பாடலை எழுதியவர் யார் எனும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆங்கில பாடலுக்கான அந்த வரிகளை ஐசென்பெர்க் எழுதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த ஐசென்பெர்க் யார் என்பது பெருவாரியான ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தில் wasted மற்றும் once apon a time போன்ற ஆங்கில பாடல்களை எழுதியதும் இந்த ஐசென்பெர்க் தான்.

அந்த பாடல்களின் வரிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தபோன நிலையில், தற்போது லியோ படத்தின் bloody sweet புரோமோ பாடலும் அதிகளவு கவனம் ஈர்த்திருக்கிறது. எனவே அந்த ஐசென்பெர்க் கண்டிப்பாக இசையமைப்பாளரான அனிருத்தாகதான் இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் ஐசென்பெர்க் அனிருத்தின் இசைக்குழுவில் வெகு நாட்களாக பணிபுரிந்து வருபவர் என்றும் அவர் அனிருத்தின் நெருங்கிய நண்பர் என்றும் சொல்லப்படுகிறது.