தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரியின் விழாவிற்கு நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கல்லூரி காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுடைய வாழ்க்கையை மாற்றக்கூடியவை. இதை நீங்கள் மறந்து விடக்கூடாது. மேலும் படித்து முடித்து உயரத்தை அடைந்த பிறகு எப்போதும் பணிவுடன் இருங்கள் என்று அறிவுரை கூறினார்.