சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை 160 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று மாலை விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும் நிலையில் கடந்த சில தினங்களாகவே ஏற்ற இரக்கத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை கூடிய நிலையில் மாலை குறைந்துள்ளது. அதன்படி 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,13,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14175 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை திடீரென குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
