
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, ED அதிகாரி லஞ்சம் வாங்கிய செய்தி உங்கள மாதிரி தான் நானும் பத்திரிகையிலும் பார்த்திருக்கேன்…. டிவிலயும் பார்த்திருக்கேன்….. உங்கள மாதிரி தான் நானும் பார்த்திருக்கேன்….. அதுல கருத்து சொல்லனும்னு சொன்னால்…. தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், மாண்புமிகு முதல்வரின் உடைய வழிகாட்டுதலின்படி சிறப்பாக பணியாற்றுகின்றார்கள்.
இதன் மூலம் என்ன தெரிகிறது என்று சொன்னால் ? மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ போன்ற அந்த மத்திய அரசினுடைய நிறுவனங்கள்…. மத்திய அரசினுடைய மனநிலையை தெரிந்து கொண்டு….. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அல்லாத மாநிலங்களில் இருக்கின்ற அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அவர்களையெல்லாம் குறிவைத்து….
அவர்களுக்கு முதலில் நூல் விடுவது ? எப்படி நூல் விடுவாங்க என்றால் ? உங்களுக்கு இப்படி எல்லாம் இருக்கு….. பிரச்சனை இருக்கு….. எனக்கு வேண்டிய ஆளு நான் அவர்களை சமாதானம் படுத்தி வைத்திருக்கேன்… உங்களுக்கு எந்த பிரச்சனை வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்… அப்படின்னு சொல்லி சொல்லி…. ஒவ்வொன்னா பேசி அவர்களுக்கு இடைத் தரகர்களாக பல பேர் வச்சிருக்காங்க…. இந்த மூன்று நிறுவனங்களுக்கும். குறிப்பாக இன்றைக்கு அமலாகத்துறை சேர்ந்தவர்கள் தான் இதிலே அதிகமாக இடைதரகர்கள் வைத்துள்ளார்கள் என தெரிவித்தார்.