தமிழகத்தில் 2023-24 ஆம் வருடத்திற்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு எட்டாம் தேதியும், 11ஆம் வகுப்பு பொது தேர்வு 4 ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 10, 11, 12ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு மாதிரி வினாத்தாள் தொகுப்பு தேர்வு துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் தேர்வுக்கு எப்படி எல்லாம் தயாராகலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் எப்படி கேள்விகள் ? எப்படி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் இதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.