அமெரிக்காவை சேர்ந்த ஒரு போர்க்கப்பல் தைவானின் ஜலசந்தியில் சென்றதற்கு, சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

சீன நாட்டிடமிருந்து பிரிந்த பிறகு தன்னை சுதந்திர நாடாக தைவான் கருதுகிறது. எனினும், சீனா தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று கூறிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் தங்கள் படைகளை அனுப்பி தைவான் நாட்டை தங்களுடன் இணைத்துக் கொள்ளவும் முயன்று  வருகிறது.

இதற்க்கிடையில் அமெரிக்கா, தைவான் நாட்டிற்கு பல வழிகளில் உதவிக்கொண்டிருக்கிறது. இந்த செயல் சீனாவை ஆத்திரமடைய செய்கிறது. இந்நிலையில், தைவானை பிரிக்கக்கூடிய, தைவான் ஜலசந்தியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு போர்க்கப்பல் நேற்று சென்றிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த சீனா, கடுமையாக எதிர்த்திருக்கிறது. சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் இந்த பயணம் மோதலை ஏற்படுத்தும் செயல். பிராந்தியத்தினுடைய அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் குறைக்கும் செயல் என்று கடுமையாக சாடியுள்ளார்.