அமெரிக்க நாட்டில் பள்ளி ஆசிரியரை சிறுவன் துப்பாக்கியால் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க நாட்டின் விர்ஜீனியா மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் ஆறு வயது சிறுவன், ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து திடீரென்று சிறுவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை நோக்கி சுட்டார். இதில், படுகாயமடைந்த ஆசிரியை உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

காவல்துறையினர் அந்த சிறுவனை காவலில் வைத்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்த தாக்குதலில் மற்ற மாணவர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை. எனினும், சிறுவனிடம் துப்பாக்கி எப்படி வந்தது? அதன் பின்னணியில் இருப்பது என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.