பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப்பின் மகளுக்கு சுவிட்சர்லாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான நவாஸ் செரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியினுடைய மூத்த துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் தன் தந்தையுடன் சுவிட்சர்லாந்திற்கு சென்றிருக்கிறார்.

அங்கு, ஜெனீவா நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தொண்டை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதேபோன்று, நவாஸ் செரீப் ஜெனீவா நகரில் இதய அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து இருவரும் ஜெனீவாவில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.