
இந்தியாவிற்கு லண்டனிலிருந்து வந்த விமானத்தில், மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் வாயிலுக்கு சென்ற ஒரு நபரை இந்திய மருத்துவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
லண்டனிலிருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா விமானத்தில் விஸ்வராஜ் விமலா என்னும் மருத்துவர் பயணித்திருக்கிறார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர் ஆவார். இந்நிலையில் அவருடன் அந்த விமானத்தில் பயணித்த சக ஊழியர் ஒருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக விஸ்வராஜ் அவரை காப்பாற்ற முயன்றார்.
விமானத்தில் இருந்த முதலுதவி சிகிச்சை உபகரணங்களை வைத்து காப்பாற்றிவிட்டார். எனினும், மற்றொரு முறை மீண்டும் அவருக்கு மாரடைப்பு உண்டானது. எனவே, விமானம் தரையிறங்கும் வரை சுமார் 5 மணி நேரங்கள் அவரை உயிருடன் வைத்திருப்பதற்காக கடுமையாக போராடினார்.
அதன் பிறகு, விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அவசரஉதவி குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து அந்த மருத்துவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது, தன் ஏழு ஆண்டு மருத்துவ பணியில் என் தாய் முதல் தடவையாக அதிவிரைவாக நான் செயல்பட்டதை கண்டு ஆச்சர்யமடைந்தார்.
அது என்னை உணர்ச்சிவசப்படுத்தியது என்றும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு இது என்றும் கூறியிருக்கிறார். அதன் பிறகு, கண்ணீருடன் அந்த பயணி மருத்துவருக்கு நன்றி கூறியிருக்கிறார்.