இன்றைய காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. தற்போது google pay, போன் பே மற்றும் பேடிஎம் யுபிஐ செயலிகளை பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளது.

பயனர்கள் பாதுகாப்பு அம்சங்களை தவறாமல் சரிபார்த்து அவர்களின் போன் OS மற்றும் யுபிஐ செயலிகளை சமீபத்திய பதிப்புகளுக்கு புதுப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது மளிகை கடை முதல் நகைக்கடை வரை அனைத்திலும் UPI பேமெண்ட்களே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது பயனர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.