வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது. இந்த படத்தை தில்ராஜூ தயாரிக்க, தமன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர்.  இந்த நிலையில் வாரிசு பாடலாசிரியர் விவேக், நடிகர்  விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கூறியிருப்பதாவது “சில உறவுகள் என்பது வார்த்தைகளை தாண்டியது.

இந்த நம்பமுடியாத பயணத்தில் நீங்கள் தன் மீது காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை சகோதரன் போல உணர்த்தியது. நான் வேண்டுவதெல்லாம், உங்களை போன்ற நல்ல மனிதருக்கு எல்லாம் நன்றாகவே நடக்கவேண்டும் என்பதே. எனது கலைப்பயணத்தில் இந்த அழகான நாள் போல எதுவும் இருக்காது. வாழ்நாளெல்லாம் உங்களை அன்பு செய்கிறேன் என் தளபதியே” என குறிப்பிட்டுள்ளார்.