அண்மையில் தமிழ் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், இப்போது மலையாள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்கயிருக்கிறது. இதற்கு முன்னதாக பிக்பாஸ் ஷோவின் 4 சீசன்களையும் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார். அதே நேரம் கடந்த 4-வது சீசனில் மோகன்லால் தொகுத்து வழங்குவது குறித்து நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்து வந்தனர். அதாவது, அவர் போட்டியாளர்களை கண்டிப்பதில் பாரபட்சம் காட்டுகிறார் என அதிகம் சொல்லப்பட்டு வந்தது.

இதனால் இந்த பிக்பாஸ் சீசன்-5 தொகுப்பாளரில் மாற்றம் இருக்குமோ? என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 5வது சீசனையும் மோகன்லால் அவர்களே தொகுத்து வழங்குகிறார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புது சீசனுக்காக வெளியாக இருக்கும் புரோமோவுக்கான படப்பிடிப்பில் தற்போது மோகன்லால் பங்கேற்று நடித்து வருகிறார். இந்த சீசன் எப்போது இருந்து தொடங்கும் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.