புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவரது இயக்கத்தில் மாநகரம் படத்தில் நடித்து புகழ்பெற்ற சந்தீப் கிஷன் புது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு “மைக்கேல்” என பெயரிடப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

அதோடு வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உட்பட பலர் நடித்து உள்ளனர். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசைமைக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், பிப்,.3 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகியது. “மைக்கேல்” படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் துவங்கியது. இந்த நிலையில் இப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் பிப்.24 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.