தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமாஸ்மா கமிட்டாகியுள்ளார். இவர் காஷ்மீரில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென நேற்று அவருடைய தாயார் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக ஒளிப்பதிவாளர் மனோஜ் சென்னைக்கு திரும்பியுள்ளார். மேலும் அவர் தன்னுடைய தாயின் இறுதிச் சடங்குகள் பணியை கவனித்து வருகிறார்.