தமிழ் சினிமாவின் முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. இவர் நேற்று மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய உடல் இன்று தகனம் செய்யப்பட இருக்கும் நிலையில் நடிகர் மயில்சாமிக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் மயில்சாமி சென்னை எடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்ற நிலையில் ட்ரம்ஸ் மணியுடன் பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

அதன் பிறகு அதிகாலை 3.30 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய மயில்சாமிக்கு 4 மணி அளவில் பசி எடுத்துள்ளது. அப்போது மயில்சாமி இட்லி சாப்பிட்ட நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் மயில்சாமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். நடிகர் மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் மயில்சாமியின் இறுதி ஆசையை பற்றி கேள்விப்பட்டேன்.

இது பற்றி ட்ரம்ஸ் மணியிடம் பேசிவிட்டு மேகநாதேஸ்வரன் திருக்கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு கண்டிப்பாக பாலாபிஷேகம் செய்வேன் என்று கூறியுள்ளார். மேலும் டிரம்ஸ் சிவமணி நடிகர் மயில்சாமி சிவன் கோவிலுக்கு டிரம்ஸ் மணியையும் விவேக் சாரையும் அழைத்து வந்தது போன்று நடிகர் ரஜினிகாந்தையும் அழைத்து வருவேன் என்று சொன்னதாக கூறியிருந்தார். இதுதான் மயில்சாமியின் கடைசி ஆசை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த ஆசையை தற்போது ரஜினிகாந்த் நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்துள்ளார். மேலும் நடிகர்கள் மயில்சாமியின் உடல் சென்னை ஏவிஎம் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட இருக்கிறது.