மூதாட்டி இடம் நகையை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கூலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லைலா என்பவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர் தற்போது நூலக பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் நூலகம் செல்ல அங்கிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மூதாட்டி இடம் நைசாக பேச்சு கொடுத்து எங்கு செல்ல வேண்டும் என கேட்டு இருக்கின்றார். நூலகத்திற்கு செல்ல வேண்டும் என கூறியதால் நானும் அவ்வழியாகத்தான் செல்கிறேன் எனக் கூறி மோட்டார் சைக்கிளில் மூதாட்டியை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கூட்டிச் சென்றார்.

பின் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றதும் அந்த பெண்மணி மூதாட்டியிடம் நீங்கள் அணிந்திருக்கும் கம்மல் நன்றாக இருப்பதாகவும் எனக்கு கொடுத்தால் போட்டோ எடுத்துக்கொண்டு திருப்பி தருவதாகவும் தெரிவித்தார். இதனை நம்பிய மூதாட்டி காதில் இருந்த இரண்டு பவுன் தங்க கம்மல் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்ளிட்டவற்றை அந்தப் பெண்மணியிடம் கொடுத்திருக்கின்றார். இதை அணிந்துகொண்ட அந்த பெண்மணி நைஸ் ஆக மோட்டார் சைக்கிளில் தப்பித்து விட்டார். இதனால் அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்மணியை வலைவீசி தேடி வருகின்றார்கள்.