ஜெர்மனியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில், முதுகு மசாஜ் செய்யச் சென்ற 26 வயது இளைஞருக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் சம்பவம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“இங்கு பாலியல் சேவைகள் கிடையாது” என்று வெளியே போர்டு மாட்டப்பட்டிருந்த போதிலும், மசாஜ் செய்ய வந்த பெண் ஊழியர் அந்த இளைஞரின் அந்தரங்க உறுப்பைத் தொட்டு அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், தான் மிகவும் அசுத்தமாக உணரப்பதாகக் கூறி போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பெண் ஊழியருக்கு 1000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 83,000 ரூபாய்) அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தனது தவற்றை ஒப்புக்கொண்ட அந்த ஊழியர், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.