முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் பிப்ரவரி 14, 2026 அன்று பிரையன் டைலர் கோஹனின் ‘No Lie’ போட்காஸ்டில் (Podcast) கலந்துகொண்டார். அப்போது அவரிடம், “நிஜமாவே ஏலியன்ஸ் இருக்கிறார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஒபாமா, மிகவும் கூலாக “அவர்கள் இருக்கிறார்கள் (They’re real), ஆனால் நான் அவர்களை நேரில் பார்த்ததில்லை” என்று கூறி அதிர வைத்தார். மேலும், ஏலியன்ஸ் ஒன்றும் ஏரியா 51 (Area 51) போன்ற ரகசிய இடங்களில் மறைத்து வைக்கப்படவில்லை என்றும், அப்படி ஒருவேளை இருந்தால் அமெரிக்க அதிபருக்கே தெரியாமல் மிகப்பெரிய சதி நடந்திருக்க வேண்டும் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

​ஒபாமாவின் இந்தப் பேச்சு இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அவர் இதை வேடிக்கையாகச் சொன்னாரா அல்லது உண்மையைத்தான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாரா எனப் பெரிய விவாதமே கிளம்பியுள்ளது. ஏற்கனவே 2015-ல் ஜிம்மி கிம்மல் நிகழ்ச்சியிலும், 2021-ல் ஜேம்ஸ் கார்டன் நிகழ்ச்சியிலும் வானத்தில் பறக்கும் விளக்க முடியாத மர்மப் பொருட்கள் (UFO/UAP) குறித்து ஒபாமா பேசிய பழைய வீடியோக்களும் இப்போது டிரெண்டாகி வருகின்றன. “நம்ம உலகத்தைத் தவிர வேறு கிரகத்தில் உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளது” என்ற ஒபாமாவின் இந்தக் கருத்து, ஏலியன் ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.