தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தற்போது தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார், அவர் கூறியதாவது, எல்லா துறையிலும் அதிர்ஷ்டம் மிகவும் முக்கியம். அதிர்ஷ்டம் என்பது வாழ்வில் ஒரு முறை தான் கதவை தட்டும். அப்போதே நாம் கதவை திறந்து விட வேண்டும். அர்ஜுன் ரெட்டி பட வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது.

ஆனால் அதில் அதிக அளவில் முத்த காட்சிகள் இருப்பதால் நான் நடிக்க மறுத்து விட்டேன். ஆனால் அந்த படத்தை பார்த்த பிறகு தான் அது எவ்வளவு அற்புதமான படம் என்று எனக்கு தெரிந்தது. அந்த படத்தை தவறவிட்டது என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அதேபோன்று என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகவும் அற்புதமான வாய்ப்பு கமல்ஹாசனுடன் நடித்தது. சினிமாவில் சகாப்தமாக விளங்கும் கமல்ஹாசனுடன் நடித்தது சிறப்பான அனுபவம் என்று கூறியுள்ளார். மேலும் பார்வதி ஞாயிறு பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.