இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. இந்தத் திரைப்படத்தின் தோல்வியினால் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கு ஹிந்தி படங்களில் நடித்து வந்த பூஜா ஹெட்டேவுக்கு தெலுங்கில் வெற்றி பெற்ற அல வைக்குந்தபுரமுலோ திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின் தெலுங்கு தமிழ் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த வகையில் தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

தற்போது நடிகர் அஜித்தின் “வீரம்” திரைப்படம் ஹிந்தி ரீமேக்கான “கிசி கா பாய் கிசி கி ஜான்” திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார். அண்மையில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் பரவியது. சல்மான்கான் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டேவும் பூஜா ஹெக்டே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சல்மான்கானும் பங்கேற்றனர் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பூஜா ஹெக்டே தானது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து வேலைக்கு கிளம்ப வேண்டும் என பதிவிட்டார். இதற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் சல்மான் கானுடன் எப்போது திருமணம் செய்வீர்கள் என கமெண்டில் கேள்வி கேட்டிருக்கின்றார்.