வாரிசு திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி உள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வழக்கமான விஜய் திரைப்படமாக இருக்காது எனவும் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும் என்ற தகவல் வெளியானதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கின்றது.

இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்த வருகின்ற நிலையில் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியிருக்கின்றது. அதன்படி வாரிசு திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.