டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம் வீடியோ வெளியாகி உள்ளது. 

நடிகர் அருள்நிதி நடிப்பில் சென்ற 2015 ஆம் வருடம் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இத்திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கினார். இவர் இமைக்கா நொடிகள், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர் டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் அருள் நிதியை வைத்து இயக்கி வருகின்றார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்க சென்ற நவம்பர் மாதம் படபிடிப்பு ஆரம்பமானது.

இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும்  வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை இருள் ஆளப்போகின்றது என்ற தலைப்பில் படக்குழு வெளியிட்டுள்ளார்கள். மேலும் புனிதமற்ற பழிவாகங்கல் என்ற ஹாஷ்டாக்கும் வைரலாகி வருகின்றது.