நடிகர் விஜய் திரைப்படத்துடன் பிரியா பவானி சங்கர் படம் மோதுகிறது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர்கள் வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தினார்கள். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், ஓ மணப்பெண்ணே, யானை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரின் கைவசம் தற்பொழுது 9 திரைப்படங்கள் இருக்கின்றது. திரைப்படங்களில் பல படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றது. இந்த நிலையில் தெலுங்கு திரைப்படமான கல்யாணும் காமினியும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெலுங்கு பதிப்பு வாரசுடு(வாரிசு) ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அநேகமாக அது ஜனவரி 12 அல்லது 14 ஆக இருக்கலாம் என சொல்லப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.