சாய் பல்லவியின் பாரம்பரிய உடை அணிந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற சாய்பல்லவி தனது நடிப்பு மற்றும் நடன மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கின்றார். இவர் மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.

சென்ற வருடம் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சாய்பல்லவி கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் அவர் ஊட்டியில் தனது குடும்பத்துடன் படுகா மக்களின் பாரம்பரிய உடை அணிந்து ஹிதாய் திருவிழாவில் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படங்களில் சாய் பல்லவி தங்கை மற்றும் தம்பியுடன் உள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.