தமிழ்நாடு பொது துணைப் பணியில் ஜவுளி துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வு கடந்த அக்டோபர் ஐந்து மற்றும் ஆறு ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 35 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். கணினி அடிப்படையில் நடத்தப்பட்ட எழுத்து தேர்வின் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த பணிகளுக்கான தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. என்னப்பா பதிவின் போது சமர்ப்பித்த ஆவணங்களை விண்ணப்பத்தாளர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இது குறித்த மேலும் விவரங்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.