
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, நம்முடைய சென்னை மாமன்ற உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியினுடைய 199 வேட்பாளர் இருக்கிறாங்க. எத்தனை பேரு இங்கு இருக்கீங்க கை தூக்குங்க பாக்கலாம் ? அண்ணே நான் பாரதிய ஜனதா கட்சி எலக்சன்ல போட்டியிட்டேன், கடந்த முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டேன்.
இது உங்களுடைய கடமை…. அந்த 199 பேரும் களத்துக்கு வரணும். 199 பேரும் மேடையில் இருக்கக்கூடிய தலைவர்கள், மேடையில் இருக்கக்கூடிய தலைவர்கள் 199 பேரையும் களத்துக்கு கொண்டு வந்து, ஏன்னா….. ஒவ்வொருத்தரும் 3000, 2000, 4000, 5500 ஓட்டு வாங்கினவங்க…. அந்த 199 பேர். யாரையுமே நீங்க விடக்கூடாது. இந்த தேர்தலுக்கு அடுத்த 70 நாட்களுக்கு யாரையும் நீங்கள் எங்கேயும் விடக்கூடாது. எல்லோரையும் நீங்கள் அரவணைக்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் நமக்கு முக்கியம்.
நமக்குள்ள எந்த பங்காளி சண்டையோ, வாய்க்கால் சண்டையோ, பகையாளி சண்டையோ நமக்குள்ள கிடையாது. நாம் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய கரத்தை வலுப்படுத்துவதற்காக வந்திருக்கின்றோம். இந்த நோக்கத்தில் நாம் இருக்கின்றோம். அப்படி இருக்கும்போது யாரையும் விடாமல், நீங்க பர்சனலா ஒரு சேலஞ்சா எடுத்துகிட்டு போகணும் என தெரிவித்தார்.