சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின்,  இவங்க என்ன நினைக்கிறாங்கன்னா….  சும்மா திருக்குறள் சொன்னா போதும்…. பொங்கல கொண்டாடினா போதும்….. அயோத்தியில் கோவில் கட்டுனா போதும்…. தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போடுவாங்கன்னு ஏமாத்த நினைக்கிறாங்க. அவங்க நம்மளை இன்னும் புரிஞ்சுக்கல.

இது பெரியார் மண்,  பேரறிஞர் அண்ணாவின் மண், தலைவர் கலைஞரின் மண்.  மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இரண்டு முறை பிரதமராகி இருக்குறாரு. இரண்டு முறையும் தமிழ்நாட்டு மக்கள் அவரை பிரதமராக்க வாக்களிக்கவில்லை. இந்த முறை நிச்சயமாக வாக்களிக்க போவதில்லை. இந்த முறை தமிழ்நாட்டை போலவே,  இந்தியாவும் செயல்பட போகுது.

ஒன்றியத்தில் ஆட்சியிருப்பதால் என்ன செய்யுறாங்க ? கட்சிகளை உடைக்கிறது….   எம்எல்ஏக்கள் இழுக்கிறது…..  ஆளுநர்கள் மூலமாக குறுக்கு வழியில் ஆட்சி நடத்த பார்க்கிறது. சொல்லப்போனால்,   பாஜகவிற்கு வேட்டு வைக்க வேற யாருமே வேண்டாம். ஆளுநர்களே போதும். அவங்க அந்த காரியத்தை சிறப்பா செஞ்சு முடிச்சிடுவாங்க. நாம  உருவாக்கி இருக்கக்கூடிய இந்தியா கூட்டணி அமைக்கும் ஆட்சி,  ஒற்றை கட்சி ஆட்சியாக இருக்காது….  சர்வாதிகார ஆட்சியாக இருக்காது….  கூட்டாட்சி ஆக இருக்கும் என தெரிவித்தார்.