தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் ஒரே ஆசிரியர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளை கவனித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கூடிய விரைவில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வருகின்ற மே 31ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள 2800 ஆசிரியர் காலி பணியிடங்கள் முதல் கட்டமாக நிரப்பப்பட உள்ளது.