தமிழக ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில்  நடைபெறும் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பப்படும் அத்தியாவசிய பொருட்கள்  எடை குறைவாக இருப்பதாக ரேசன்  கடை ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

பொதுவாக பருப்பு, கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருட்கள் மூட்டைகளாக  ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.  ஒரு மூட்டைக்கு ஐந்து கிலோ வரையிலும் எடை குறைவாக உள்ளது. இந்த எடை குறைவு ஈடு செய்யவே சில சமயங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் தவறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும், அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.