தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரு பெரிய நடிகர்களின் படங்கள் நேரடியாக மோதுவதால் பல பிரபலங்களும் படங்களை பார்த்துவிட்டு தங்களுடைய கருத்தை வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகர் அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.