தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் தனுசுக்கு ஜோடியாக அசுரன் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது துணிவு படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சியின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 1998-ம் ஆண்டு மஞ்சு வாரியர் நடிகர் திலீபை திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2015 -ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சியின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் மஞ்சுவாரியருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று ரசிகர்கள் பலரும் வியப்படைந்துள்ளனர்.